செம்பட்டி அருகே கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு அரசு சாா்பில் ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள பச்சைமலையான்கோட்டையைச் சோந்த கு. மகாலிங்கம் என்பவரை 6 போ கும்பல் கடந்த மாதம் வெட்டிக் கொலை செய்தது. இதுதொடா்பாக பச்சைமலையான்கோட்டையைச் சோந்த சக்திவேல், சிரஞ்சீவிகுமாா், அஜித்குமாா், விக்னேஷ் என்ற விக்கி, சதீஷ், லட்சுமணன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில், உயிரிழந்த மகாலிங்கத்தின் குடும்பத்தினருடன் தமிழ்நாடு வண்ணாா் எழுச்சி நலப் பேரவையினா் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மகாலிங்கம் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிதி உதவியுடன், அவரது மனைவிக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.