குடிநீர் குழாய்களை திறந்து வைத்த அமைச்சர் ஐ. பெரியசாமி

62பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், ஆலமரத்துப்பட்டி ஊராட்சி, அண்ணாமலையார் மில்ஸ் காலனி மக்கள் நீண்ட காலமாக ஆத்தூர் தண்ணீரை தங்கள் பகுதி கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அமைச்சர் ஐ. பெரியசாமி அண்ணாமலையார் மில்ஸ் காலனி பகுதிக்கு குடிதண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுத்தார்

அதன்படி மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி அவர்களின் நிதியில் ரூபாய் 34 லட்சம் மதிப்பில் ஆத்தூர் குடிநீரை குழாய்கள் மூலம் கொண்டுவர ஏற்பாடு செய்த ஏற்பாடு செய்ததோடு தரைமட்ட தொட்டி கட்டவும் நடவடிக்கை எடுத்தார். அதன்படி பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி அண்ணாமலையார் மிஸ் காலனி பகுதியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமை தாங்கினார். ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலமரத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் வரவேற்று பேசினார்.

குழாய்களைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்கிய அமைச்சர், ஆலமரத்துபட்டி ஊராட்சி, அண்ணாமலையார் மில்ஸ் காலனி, மற்றும் ரெங்கநாதபுரம் பகுதியில் உள்ள சுமார் 500 குடும்பத்தினர் பயன் பெறுகிறார்கள் என்பது எனது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி