கணினி வாயிலாக பணி ஒதுக்கீடு

58பார்த்தது
பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, வாக்குப்பதிவு மையங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி வாயிலாக பணி ஒதுக்கீடு மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள், இருப்பு வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 10, 500 அலுவலர்கள் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலர்களை சட்டமன்ற தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்வதற்கான கணினி வாயிலாக தேர்வு செய்யும் பணி 21. 03. 2024 அன்று நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி வாயிலாக பணி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலைமை வாக்குச்சாவடி அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்-1, வாக்குச்சாவடி அலுவலர்-2, வாக்குச்சாவடி அலுவலர்-3 மற்றும் சில வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர்-4 என்ற வகையில் பணி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது.

பொதுத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்கு, அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும், என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி