தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். காஞ்சிபுரம் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் அவர்களே தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் பாஜகவால் வளரவே முடியாது. 2014, 2019-ல் நாடு முழுவதும் ஜெயித்த பாஜகவை, தமிழ்நாட்டு மக்கள் ஓரம்கட்டினர். நாடு முழுவதும் தோற்கப்போகிற உங்களுக்கு இந்த தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள். நீங்கள் பேசுகிற வாயில்தான் பாஜக வளர்கிறது. களத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றார்.