காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், "ஓநாய்களுக்கு அளவற்ற சுதந்திரம் வழங்கினால் ஆடுகள் என்ற இனமே இருக்காது. ஓநாய்களும் வாழும் நாட்டில் ஆடுகளையும் ஆபத்தின்றி வாழ்வதை உறுதிசெய்வதே உண்மையான சுதந்திரம்" என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு, பாஜகவை மறைமுகமாக விமர்சிப்பது போல் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.