உலகக்கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு வைரம் பதித்த மோதிரம்

62பார்த்தது
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு வைரம் பதித்த மோதிரத்தை பிசிசிஐ வழங்கியுள்ளது. 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றதற்கு பிசிசிஐ சார்பில் சிறப்பு 'சாம்பியன்ஸ் மோதிரம்' வழங்கப்பட்டது. டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்ற ஒவ்வொரு வீரரின் பெயரும் அவர்களது ஜெர்சி எண்ணும் பொறிக்கப்பட்ட வைரம் பதித்த மோதிரத்தை பிசிசிஐ வழங்கியது. இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி