தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு பெருந்திரளணி நிகழ்வுகளை ஜனவரி 2025இல் திருச்சியில் நடத்துவதற்கான ஒப்புதல் கடிதம் பெறப்பட்டுள்ளது.
தேசிய ஆணையாளர் டாக்டர் கந்தல்வாலிடம் இருந்து ஒப்புதல் கடிதத்தை நேற்று (அக்., 03) தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக்கொண்டார். அப்போது அதிகாரிகள் உடனிருந்தனர்.