தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வரும் சூழலில், நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது, இதனை அடுத்து ஜூன் 6 இன்று காலை 6 மணி நிலவரப்படி பதிவான மழையின் நிலவரம் தர்மபுரி 12 மில்லிமீட்டர், பாலக்கோடு 74. 2 மில்லி மீட்டர், மாரண்டஹள்ளி 37 மில்லிமீட்டர், பென்னாகரம் 29 மில்லிமீட்டர், ஒகேனக்கல் 10. 6 மில்லிமீட்டர் , அரூர் 32. 3 மில்லி மீட்டர், என மாவட்டத்தில் பதிவான மொத்த மழையின் அளவு 199. 1 மில்லிமீட்டர் மழையும், மாவட்டத்தின் மொத்த சராசரி மழை அளவு 22. 12 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.