கர்நாடக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 17, 000 கன அடியாக ஞாயிற்றுக்கிழமை அதிகரித்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் குளிக்க மற்றும் பரிசல் இயக்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தார் இந்த நிலையில் மழையின் அளவு குறைந்ததை அடுத்து ஆற்றில் நீரின் வரத்து சரிந்து நேற்று அக்டோபர் 07 மாலை 13, 000 கன அடியாக குறைந்தது. இதனை அடுத்து மெயின் அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையை மாவட்ட ஆட்சியர் சாந்தி நீக்கி உதர்விட்டார். மேலும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசீல்களில் சென்றும் அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.