ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு

82பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் காவிரி ஆறு தற்போது கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து சரிந்துள்ளது மேலும் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடாததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து ஒகேனக்கல் ஆற்றில் நீர் வறண்டு பாறைகளாக காணப்பட்டு வருகிறது. மேலும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு 700 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக சரிந்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 300 கன அடி வீதம் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதாக மத்திய நீர்வள மேலாண்மை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி