தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள், ரூ.10.14 லட்சம் கோடிக்கான முதலீடுகள் மற்றும் 32 லட்சம் வேலைவாய்ப்புகளால், தமிழகம் 9.69 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளதாக தொழில்துறை பெருமிதம் தெரிவித்துள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா 'விடியல் பயணத் திட்டம்', கல்லூரி செல்லும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 தரும் 'தமிழ்ப் புதல்வன்' உள்ளிட்ட பல திட்டங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.