உலக அளவில் பிரபலாமான படம் ‘Squid Game’. இந்த படத்தின் மூலம் மக்களிடம் பிரபலமடைந்தவர் தென் கொரியாவைச் சேர்ந்த மூத்த நடிகர் ஓ யோங்-சூ. இவர், இளம் நடிகை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.