2025-26ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு பாரத சாரணியர் இயக்கத்தின் சார்பாக மேற்கொள்ளவுள்ள திட்டப்பணிகள் குறித்து அதன் தலைவரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. தமிழ்நாடு பாரத சாரணியர் இயக்கத்தின் சென்னையில் உள்ள தலைமையகத்தில் இந்த கூட்டம் நடந்தது. 1926இல் நடந்த பெருந்திரளணி நிகழ்வில் திரட்டப்பட்ட ரூ.8,000 நிதியுதவியுடன் தலைமையக கட்டடம் கட்டப்பட்ட நிலையில், 100 ஆண்டுகளை நெருங்கும் இக்கட்டடத்தினை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.