மோசடி விவகாரத்தில் சிக்கிய நபரை அதிகாரிகள் தாக்கியதில் உயிரிழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சென்னை அபிராமிபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயனின் மீது தாழம்பூர் காவல் நிலையத்தில் நிலமோசடி வழக்கு பதியப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாமல் தட்டிக்கழித்த நபரை இன்று (ஏப்.9) அதிகாலை 2 காவலர்கள் சுற்றிவளைத்தனர். அப்போது கார்த்திகேயன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக உறவினர்கள் குற்றசாட்டு முன்வைக்கின்றனர். இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.