தமிழக முழுவதும் 234 தொகுதிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரடி கள ஆய்வு பயணம் மேற்கொண்டு உள்ளார் அந்த வகையில் நேற்று கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கள ஆய்வு முடித்துவிட்டு தர்மபுரி மாவட்டம் அரூரில் ஆய்வு செய்து பின்பு நேற்று மாலை பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள நூலகம், வட்டார கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி (அக். 09) திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது பள்ளி குழந்தைகளுடன் உரையாடி நூலகத்தில் உள்ள புத்தகங்களை மேற்பார்வையிட்டு சென்றார். மேலும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.