பப்பாளி விலை சரிவு விவசாயிகள் வேதனை

62பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம்பெரும்பாலை, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், கம்பைநல்லூர், மொரப்பூர், கடத்தூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பப்பாளி
சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டம் முழுக்க சுமார் 250 ஏக்கரில் பப்பாளி சாகுபடி நடந்து வருகிறது. பெங்களூர், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெரிய பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

விலை கிடைத்த போதும் இறக்கமான குறைந்த அளவு தண்ணீரே பப்பாளிக்கு தேவை என்பது உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் சிலர் தொடர்ந்து பப்பாளி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அண்மைக்காலமாக பப்பாளிக்கான விலை 50 சதவீதத்துக்கும் கீழாக சரிந்துள்ளதாலும், கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழையால் பப்பாளிக் காய்களில் புள்ளிகள் ஏற்பட்டு காய்கள் அழுகிப்போவதாலும் பப்பாளி பயிரிட்டுள்ள விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.

தற்போது வரத்து அதிகரிப்பால் மொத்த விலையில் 1 கிலோ ரூ. 10 வரை விற்பனையாகிறது. இதனை மொத்தமாக வாங்கும் வியாபாரிகள் கிலோ ரூ. 25 வரை விற்பனை செய்கின்றனர். தற்போது வரத்து திகரித்துள்ளதால் பப்பாளிக்கு விலை குறைந்துள்ளதாக கூறினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி