தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட கள் இறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தர்மபுரி காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் பேரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட காவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். அதனை அடுத்து நேற்று காரிமங்கலம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் காவலர்கள் கேத்தனஅள்ளி, கெண்டிகானஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர் மேலும் அங்கு சட்டவிரோதமாக கள் விற்பனை செய்த ஆறுமுகம் மற்றும் கோவிந்தன் என இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கள்ளை பறிமுதல் செய்து அழித்தனர்.