தர்மபுரி: தர்மபுரியில் 11. 68 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

51பார்த்தது
தர்மபுரி ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்தில் நேற்று மார்ச் 26 நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 38 விவசாயிகள் 94. 13 குவிண்டால் மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் பனங்காளி மஞ்சள் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக 23, 709 ரூபாய்க்கும், விராலி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சமாக 14, 031 ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள் குவிண்டால் 12, 021 ரூபாய்க்கு என மொத்தமாக 11. 68 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் நடந்ததாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் முரளிதரன் & வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு மஞ்சள் வாங்கினர் இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி