தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் மேல் ஆண்டி அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா முனியப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதுதொடர்பாக தம்பதிக்கிடையே அடிக் கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 4. 3. 2020ம் தேதி முனியப்பனின் தாயார் முருகம்மாள், காலை வெகு நேரமாக முனியப்பன் எழுந்திருக்காததால், முருகம்மாள் அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது, ரத்த காயங்களுடன் முனியப்பன் இறந்து கிடந் ததை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், கிருஷ்ணாபுரம் காவலர்கள் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.
இந்நிலையில், விஏஓ முன் கீதா சரணடைந்தார். விசாரணையில், குடிக்க பணம் கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் முனியப்பனை அடித்து, உதைத்து காலால் எட்டி உதைத்ததில் உயிரிழந்தது கண்டுபிடிக் கப்பட்டது. கிருஷ்ணாபுரம் காவலர்கள் வழக்குப்பதிந்து கீதாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தர்மபுரி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில். இறுதிக்கட்ட விசாரணை நேற்று நடந்தது. இதில், குற்றம்சாட்டப்பட்ட கீதாவிற்கு ஆயுள் தண்டனையும், 5000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.