தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வருடமாக மழை பொழிந்து வருவதால் வத்தல் மலைப்பகுதியிலும் கனமழை பொழிந்து வருகிறது இதனை அடுத்து நேற்று மாலை 4, 5, 6 உள்ளிட்ட கொண்டை ஊசி வளைவுகளில் பாறைகள் மற்றும் மண் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து தகவலின் பேரில் அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் உதவியுடன் மண் சரிவை சரி செய்து பேருந்துகள் இயக்கப்பட்டது.
ஆனால் பாறைகள் உருண்டு விழுந்தபடி உள்ள நிலையில் நேற்று மீண்டும் 8வது கொண்டை ஊசி வளைவில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டதால் பெரிய அளவிலான பாறைகள் உருண்டு விழுந்தன இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பேருந்துகள் இயக்க முடியாமல் இருந்தது பின்பு கனரக எந்திரம் வரவழைக்கப்பட்டு மண் சரிவு மற்றும் பாறைகள் அகற்றி போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதனால் வெகு நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.