தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் மாவட்ட அளவில் பிரத்தியேகமாக வெற்றிலைகள் விற்பனைக்காகவே வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். மார்ச் 30 நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வெற்றிலைகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை 9,000 ரூபாய் முதல் 21,000 ரூபாய் வரை விற்பனையானது. 25க்கும் மேற்பட்ட வெற்றிலை மூட்டைகள் சுமார் 5.50 இலட்சத்திற்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.