தமிழ்நாடு காது கேளாதோர், வாய் பேசதோர் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன நேற்று செப்டம்பர் 30 மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாரிமுத்து மாவட்ட செயலாளர், கரூரான் மாவட்ட தலைவர், தமிழ்ச்செல்வி மாவட்ட பொருளாளர், திருஞானம் மாவட்ட கிளை செயலாளர் விளக்க உரை ஆற்றினர். சக்கரவர்த்தி மாநில பொருளாளர் சிறப்புரை ஆற்றினார். காது கேளாதோர் மாற்றுத் திறனாளிகள் மாத உதவித்தொகை உயர்த்தி வழங்கிட வேண்டும்.
அரசு வேலையில் காது கேளாதோர் வாய் பேசாதோர் ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். அனைத்து அரசு அலுவலங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமித்திட வேண்டும். போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மணிகண்டன் மாவட்ட கிளை பொருளாளர் நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் சுரேஷ், செல்வராஜ், கதிர்வேல், நாகராஜன், பத்மநாபன் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் திரளாக கலந்து கொண்டனர்.