பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஒரு மாதத்திற்குள் கடையை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதற்காக பையர் நத்தம், கதிரிபுரம் பகுதிகளில் புதியடாஸ்மாக் கடைதிறக்க அதிகாரிகள் முயற்சி செய்தனர். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து பொம்மிடி, கோட்டமேடு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் விவசாய நிலத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்காக அங்கு புதிய கட்டிடம் கட்ட பட்டது. இதற்கு பொம்மிடி, கோட்டமேடு, சால்வளசு, குமரிமடுவு, செம்பியானூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை பொதுமக்கள், பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே இன்று காலை பொதுமக்கள், பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு கருப்புகொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த பா. ம. க. வினரும் டாஸ்மாக் கடை வைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொம்மிடி உதவி காவல் ஆய்வாளர்கள் விக்னேஷ், மாரப்பன், குணசேகரன் தலைமையி லான காவலர்கள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடு பட்டபொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.