தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாலூர், நானா குட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (60), விவசாயி. இவருக்கும் பக்கத்து நிலத்தை சேர்ந்த ராஜா(55) என்பவருக்கும். பொது பாதையில் செல் வது சம்பந்தமாக கடந்த, 15 ஆண்டுகளாக தகராறு இருந்து வருகிறது. கடந்த 25ம் தேதி காலை மோகன், தனது விவசாய நிலத்தில் முட்டுக்கல்லை நிமிர்த் திய போது, அங்கு வந்த ராஜா, முட்டுக்கல்லை எதுவும் செய்யக்கூடாது என கூறினார். அப்போது இருவருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டது. அப் போது மோகனை, ராஜா, அவரது தம்பி மகன்கள் ஜெயவேல் (37), கதிர்வேல் (35) ஆகியோர் சேர்ந்து கொடுவாள், கடப்பாரை மற்றும் மண்வெட்டியால் தாக்கினர்.
இதில் காயம் அடைந்த மோகனை அரு கில் இருந்தவர்கள் மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மோகன் அளித்த புகாரின் பேரில், ஊ. பள்ளிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜா, ஜெயவேல், கதிர்வேல் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதே போன்று ராஜா கொடுத்த புகாரின் படி மோகன் மீது வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.