தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நாட்களில் வார சந்தை நடைபெற்று வருகிறது இதில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருவர்கள். நேற்று நடந்த சந்தைக்கு சுமார் 750 ஆடுகள். 600 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வந்த நிலையில் ஆடுகள் விற்பனை சூடுபிடித்தது ஆடுகள் ரகம் மற்றும் அளவை பொறுத்து ஒன்று 8000 முதல் 18, 000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது ஆக மொத்தம் 90 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. இதேபோல், 42 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது. நாட்டுக்கோழி விற்பனை 3 லட்சம் அளவில் இருந்தது. ஆக மொத்தம் நேற்றைய சந்தையில் 1. 35 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும் கால்நடை வரத்து மற்றும் விற்பனை அதிகரித்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.