தர்மபுரி மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ கிராபர்களின் நல சங்கம் சார்பில் முப்பெரும் விழாநேற்று நடைபெற்றது. இதில் 2025 ஆம் ஆண்டுக்கான டைரி காலண்டர், அடையாள அட்டை வழங்கும், நிகழ்ச்சி தர்மபுரி ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சுரேஷ் அவர்கள் தலைமை வகித்தார் மாவட்ட அமைப்பாளர் ஆனந்தன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் கிருஷ்ணன். சுப்பிரமணி. பிரபு குமார். ஆகியோர் முன்னில வைத்தனர். நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் சிவகுமார் பொதுச்செயலாளர் ஸ்ரீதரன் மாநில அமைப்பாளர் சரவணன் மாநில துணைத்தலைவர் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த விழாவில் தர்மபுரி மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ கிராபர்கள் நல சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் குழந்தைகள் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்தலில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் பாராட்டு தெரிவிக்கப்பட்டது அதைத் தொடர்ந்து. சங்க உறுப்பினர்களுக்கு. அடையாள அட்டை வழங்கப்பட்டது இதில் தர்மபுரி மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ கிராப்பர்களின் பயன்படுத்துவதில் கண்காட்சி ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான புகைப்பட கலைஞர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.