தர்மபுரி: அதிமுக அலுவலகத்தில் கள ஆய்வு ஆலோசனை கூட்டம்

71பார்த்தது
தர்மபுரி அதிமுக கட்சியின் சார்பில் தர்மபுரி அதிமுக கட்சி அலுவலகத்தில் கள ஆய்வு குழுவினர் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. நகர கழக செயலாளர் பூக்கடை ரவி தலைமை வைத்தார் இந்த கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கேபி அன்பழகன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மாநில அமைப்பு செயலாளர் சிங்காரம். கழக துணை பொதுச் செயலாளர் கே பி முனுசாமி. மாநில மகளிர் அணி செயலாளர் வளர்மதி மாநில விவசாய அணி தலைவர் டி ஆர் அன்பழகன் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், சிறப்புரை ஆற்றினர்.

இதில் துணைப் பொதுச் செயலாளர் கேபி. முனுசாமி பேசும்போது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக்க வேண்டும் அதற்கு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் கட்சி நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றி வெற்றி பெற செய்ய வேண்டும். அதே போன்று அதிமுக கொண்டுவந்த அனைத்து திட்டங்கள் திமுக அரசு நிறுத்திவிட்டது அதை பொதுமக்களிடையே எடுத்துச் சென்று கூற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி