பாலக்கோடு: மண் கடத்திய லாரி பறிமுதல் ஓட்டுநர் கைது

55பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளில் சட்ட விரோதமாக மண் கடத்தி செல்வதாக தொடர்ந்து புகார்கள் வந்ததை எடுத்து கனிமவளத்துறை அதிகாரிகள் நேற்று மாலை காரிமங்கலம் மற்றும் மொரப்பூர் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட ஐந்து யூனிட் மண் இருந்தது தெரியவந்தது இதனை அடுத்து அதிகாரிகள் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் மேலும் காவலர்கள் ஓட்டுநர் கோவிந்தன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி