தர்மபுரி: தந்தத்துக்காக யானையைக் கொன்ற மூன்று பேர் கைது

53பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள எமனூர் பதனவாடி காப்புக்காடு கோடு பாய் கிணறு வனச்சரகத்தில் கடந்த ஒன்றாம் தேதி அன்று ஆண் யானை ஒன்று மர்மமான முறையில் உடல் சிதைக்கப்பட்டு உயிரிழந்து கடந்தன. இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் வனத்துறையினர் கால்நடை மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர் யானையின் உடலை பரிசோதனை செய்த போது யானையின் தந்தம் வேட்டையாடப்பட்டு வன உரிமை சட்டத்திற்கு முரணாக எடுத்துச் சென்று இருப்பது தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் கடமையை தவறியதாக தெரிவித்து பணியில் இருந்த வனவர் சக்திவேல் வனக்காப்பாளர் தாமோதரன் ஆகிய இருவரையும் பணி நீக்கம் செய்து மாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவிட்டு யானையை வேட்டையாடிய நபர்களை கண்டுபிடிக்க மூன்று தனிக்குழு அமைக்கப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு நேரத்தில் யானையை சுட்டுக்கொன்று தந்தத்தை வேட்டையாடி கடத்திச் சென்ற மூன்று நபர்களை பிடித்ததாக வனத்துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மூன்று நபர்களையும் இன்று பென்னாகரம் வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மேலும் யானையின் தந்தத்தை வேட்டையாடி சென்ற கும்பலில் இருவர் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி