தர்மபுரி: நிழற்கூடம் அமைக்க ஆட்சியர் தலைமையில் பூமி பூஜை

68பார்த்தது
தர்மபுரி 4 ரோடு பகுதியில் நிழற் கூடம் அமைக்க தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 16 லட்சம் மதிப்பிலான நிழல் கூடம் அமைக்க இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி தலைமையில் பூமி பூஜையை தொடங்கி வைத்தனர். இதில் தர்மபுரி நகரமன்ற தலைவர் லட்சுமி, நகராட்சி துணைத் தலைவர் நித்ய அன்பழகன், நகராட்சி ஆணையர் சேகர், தர்மபுரி நகர செயலாளர் நாட்டார் மாது, தர்மபுரி நகரமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், கோட்டை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சுருளிராஜன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சண்முகம், மற்றும் முல்லைவேந்தன், வாசுதேவன் வெல்டிங் ராஜா, கனகராஜ் சந்திரமோகன், அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி