தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேதாதம்பட்டி பகுதி சேர்ந்தவர் ஆனந்தன் இவருக்கு வயது 43 இவர் தனது சொந்த ஊருக்கு ஆக்ராவிலிருந்து வரும்பொழுது நிலைத்தடுமாறி கீழே விழுந்தது ரயில் மோதி உயிரிழந்தார். அங்கிருந்து பெங்களூர் விமான நிலையத்தின் மூலமாக அவரது உடல் சொந்த ஊருக்கு பேதாதம்பட்டிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனை அடுத்து இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அரூர் ஒன்றிய கழகச் செயலாளர் ராமச்சந்திரன் மூவேந்தர் ஆகியோர் ஆனந்தன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் இதில் ஒன்றிய துணை செயலாளர் டி என் தீர்த்தகிரி கலையரசன் சர்ச்சில் சாக்கடிஸ் இளையராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்து அஞ்சலி செலுத்தினர்.