இருமத்தூரில் ராமதாஸ் மற்றும் செளமியா அன்புமணி பிறந்தநாள் விழா

62பார்த்தது
இருமத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பசுமைத்தாயகம் சார்பில் பாமக நிறுவனர் ராமதாஸின் 86 வது பிறந்த நாள் மற்றும் பசுமைத் தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி ஆகிய இருவரின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நோட்டு புத்தகங்கள் இனிப்புகள் வழங்கி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பசுமைத்தாயக மாவட்ட துணை தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். பசுமைத்தாயக மாவட்ட செயலாளர் வீரமணி வரவேற்று பேசினார். ஒன்றிய கவுண்சிலர் ராஜலிங்கம் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ராஜேந்திரன் சபரி பழனி ஆறுமுகம் ஜீவமணி ஊடகப் பேரவை கோவிந்தன் ரகு பிரசாந்த் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில உழவர் பேரவை செயலாளருமான வேலுசாமி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்க கம்பைநல்லூர் பேரூர் துணை சேர்மன்மதியழகன் கே கே மாவட்ட துணை தலைவர்முருகன், மொரப்பூர் ஒன்றிய துணை சேர்மேன் பெருமாள் மற்றும் வெங்கடேசன், நாகராஜ் வேடியப்பன் உள்ளிட்ட இன்னும் பல்வேறு பாமக உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி