தனிப்பட்ட வாழ்க்கை, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வது உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் நடிகை டாப்ஸி செய்வதில்லை. அவர் அளித்த பேட்டியில் "உண்மையில், எனது திருமணத்தை நான் பகிரங்கமாகச் சொல்லாததால் அது குறித்து மக்களுக்குத் தெரியாது. எனக்கு இந்த வருடம் அல்ல, போன வருடம் டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. 2013ல் இருந்து எனது பார்ட்னரை எனக்கு தெரியும். அவரும் என்னை நன்கு அறிவார்" என்று தெரிவித்துள்ளார்.