தமிழ் திரைப்பட துறையின் 'நகைச்சுவை மன்னன்' என அழைக்கப்பட்டவர் சந்திரபாபு. இவர் புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல் பாட்டு, இசை, ஓவியம், நாடகம் என அனைத்திலும் ஈடுபாடு கொண்ட அற்புதமான கலைஞனாகவும் விளங்கியவர். இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிகர் சந்திரபாபுவின் பயோபிக் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம்.