அரூர் அடுத்த மோப்பிரிப் பட்டி பஞ். , க்கு உட்பட்ட காந்தி நகரில், 40க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசிக்கின்றனர். இப் பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் நடந்தது. இந்நி லையில் ஆழ்துளை கிணற்றி லுள்ள மின்மோட்டார் பழுதால் கடந்த, 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் பாதித்துள்ளது. மேலும், ஒகேனக்கல் குடிநீர் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி படுகின்றனர். பழு தான மின்மோட்டாரை சரிசெய்து முறையாக குடிநீர் வழங்க, பஞ். , நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.