இல்லம் தேடி கல்வி முதற்கட்ட பயிற்சி

56பார்த்தது
இல்லம் தேடி கல்வி முதற்கட்ட பயிற்சி
அரூர் வட்டார வள மையத் தில், இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியில் 136 தன்னார்வ லர்கள் கலந்து கொண்ட னர். இரண்டாம் கட்ட பயிற்சி இன்று நடைபெற உள்ளது. இதில் 170 இரண் டாம் கட்டமாக பயிற்சிபெற உள்ளனர். இதில் இல்லம் தேடிக் கல்விக்கு வரும் மாணவர்களுக்கு எளிமையாக தமிழ், ஆங் கிலம், கணக்கு ஆகிய பாடங்களில் எவ்வாறு கற்பிப்பது என்பது குறித்து கருத்தாளர்கள் விளக்கி னர். தமிழ், ஆங்கிலத்தில் வாசித்தல், எழுதுதல், மற் றும் கணிதத்தில் அடிப் படை திறன்களின் முக்கி யத்துவம் குறித்து ஆசிரியபயிற்றுநர்கள் இளங்கோ, செந்தில், கற்பகவள்ளி, மகேந்திரன், தருமன், சிலம்பரசன், ஜெயசீலன் ஆகியோர் பயிற்சி அளித்த னர். இப்பயிற்சிக்கான ஏற் பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ ) விஜயன், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சிவலிங்கம், நூர்முகமது, கலையரசி, ஆனந்தி ஆகி யோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி