உலக சுற்று சூழல் விழிப்புணர்வு

67பார்த்தது
உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு ஆண்டியூர் கிராமத்தில் சூழல் மேம்பாட்டு குழு சார்பில் 50 திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்மன் கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு பணி செய்தும், தீர்த்மலை சூழல் மேம்பாட்டு குழு சார்பில் விழிப்புணர்வு பாதாகைகள் ஏந்தி 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அலுவலக வளாகத்தில் இருந்து முக்கிய தெருக்கள் வழியாக பேரணி நடத்தியும், இருசக்கர வாகனத்தில் பதாகைகளுடன் ஊர்வலம் சென்றும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் , அனைவரும் ஒன்று சேர்ந்து உறுதி மொழி எடுத்தும் உலக சுற்று சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் IFS, உதவி வன அலுவலர் சரவணன் அறிவுரையின் படி தீர்த்தமலை வனச்சரகத்தின் சார்பாக பெரியண்ணன் வனச்சரக அலுவலர் தலைமையில் வனவர் வடிவேல் வனக்காப்பாளர்கள்வெங்கடேசன், ஜீவா, சுரேஷ், மதன் குமார், குப்புசாமி, நாசி, ஜெயலட்சுமி, கல்பனா, வனக்காவலர் சிற்றரசன், மல்லிகா, தோட்டகாவலர்கள் கலந்துகொண்டனர்

தொடர்புடைய செய்தி