தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே நேற்று தனியார் ஹோட்டலில் காவேரி என்கிற காவல் உதவி ஆய்வாளர் (SSI)ஒருவர் உணவு சாப்பிட்டு விட்டு கடை உரிமையாளரிடம் சாப்பிட்ட உணவுக்கு கடை உரிமையாளர் பணம் கேட்டுள்ளார். அதற்கு காவல் உதவி ஆய்வாளர் தகராறு செய்துள்ளார். மேலும் ஒரு கட்டத்தில் கோபமடைந்த உதவி ஆய்வாளர் பணத்தை தூக்கி எறிந்துவிட்டு ஆபாசாமான வார்த்தைகளால் திட்டியும் சில்லறை கொடுக்கிறார். தொடர்ந்து வாக்குவாதம் முத்தி வரவே தனது காலில் இருந்த ஷூவை எடுத்து ஓட்டல் உரிமையாளரை தாக்க முயற்சிக்கிறார் அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த உதவி ஆய்வாளர் தினமும் ஓடடலில் உணவு அருந்திவிட்டு சரியாண பணத்தை தராமலும் கடன் வைத்தும் சென்றுள்ளார். அதேபோல கடன் கேட்டதால் ஆத்திரம் அடைந்த காவேரி உதவி ஆய்வாளர் தாக்க முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இருதரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று உதவி ஆய்வாளர் காவேரியை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.