தருமபுரி நாச்சியப்பா கவுண்டர் தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நெல்லிக்கனி விற்பனை நிலையத்தில் தீபாவளி - 2024 சிறப்பு தள்ளுபடி விற்பனையினை இன்று செப்டம்பர் 24 மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, தானும் ஒரு புடைவையினை வாங்கி முதல் விற்பனையை துவக்கி வைத்து, தூய காஞ்சிபுரம் பட்டுப் புடவை தூய வெள்ளி ஜரிகை அதற்கு உண்டான உத்தரவாத அடையாள அட்டையினை பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது,
இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 1935 முதல் தொடங்கப்பட்டு 89 ஆண்டுகளாக தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலும் தொடர்ந்து வேலைவாய்பினை வழங்குவதற்காக விழாகாலங்களில் 30% வரை அரசு சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது.
இந்தாண்டு தீபாவளி 2024-ல் புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம் பட்டு புடவைகள், ஆரணி பட்டு புடவைகள், சேலம், தஞ்சாவூர் பட்டு புடவைகள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன. மேலும் கோவை, மதுரை, திண்டுக்கல், பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து இரக காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும் மற்றும் களம்காரி காட்டன் புடவைகள் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்