வேட்டையன் பட விவகாரம்.. மாஜி அமைச்சர் எச்சரிக்கை

66பார்த்தது
வேட்டையன் பட விவகாரம்.. மாஜி அமைச்சர் எச்சரிக்கை
வேட்டையன் திரைப்படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்ட காட்சியை நீக்காவிட்டால் மக்களுடன் சேர்ந்து போராட வேண்டிய சூழல் வரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரித்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில், “கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் ஆசிரியரை படம் பிடித்து, தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் சர்ச்சை” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதனை நீக்க கோரி அப்பகுதியினர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி