மதுரை: உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் பழமை வாய்ந்த அங்காள ஈஸ்வரி மற்றும் நொண்டி கருப்பசாமி கோயிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 51 அடி கோபுரத்துடன் அர்த்த மண்டபம் எழுப்பி நேற்று (பிப்., 17) கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மூன்று கால யாக பூஜைகள் செய்து, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அங்காள ஈஸ்வரி மற்றும் கருப்பசாமி சிலைகளுக்கு பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.