அரூர் அருகே உள்ள வேப்பம்பட்டியை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவர் ஆடு மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று இரவு இவரது வீட்டின் முன்பு கட்டி வைத் திருந்த ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இதனால் முருகன் எழுந்து சென்று பார்த்தார். அப்போது 3 பேர் 2 ஆடுகளை திருடி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார்: இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் அரூர் பகுதியை சேர்ந்த கலையரசன் (வயது24), மற்றும் 18 வயது வாலிபர்கள் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.