தேர்தல் பணிக்கு முன்னாள் படைவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

72பார்த்தது
நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னாள் படைவீரர்களை சிறப்பு காவலர்களாக அதிகளவில் ஈடுபடுத்திடு மாறு கோரப்பட்டுள்ளார்கள்.
நாட்டிற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு நம் தேசத்தை காத்திட்ட முன்னாள் படைவீரர்கள் நமது மாவட்டத்தில் நடை பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் தங்களது பாதுகாப்பு பணியினை சிறப்பான முறையில் ஆற்றிடவும்.

இதுவரையில் விருப்பம்
தெரிவிக்காத முன்னாள் படைவீரர்கள் தங்களது விருப்பத்தினை உடன் தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி தங்களது விருப்பத்தினைவிண்ணப் பமாக அளிக்குமாறும், அலுவலகத்திற்கு வருகை தர இயலாத முன்னாள் படைவீரர்கள் தங்கள் வசிக்கும் பக்கத்தில் உள்ள
காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விருப்ப விண்ணப்பம் அளித்து விட்டு அதன் விவரத்தினை அலுவலக தொலைபேசி
எண்ணில் (தொ. பே. எண். 04342-297844) தொடர்பு கொண்டு உரிய தகவல் தெரிவிக்குமாறும் இதன் தொடர்ச்சியாக முன்னாள்
படைவீரர்கள் விருப்ப விண்ணப்பம் அளித்தால் தான் தேர்தல் பணியில்
இருந்தாலும் தாங்கள் வாக்களிக்க ஏதுவாக அனைத்து முன்ஏற்பாடு களையும் மாவட்ட நிர்வாகத் தால் தகுந்த முன் ஏற்பாடு செய்துதர ஏதுவாக அமையும் என்பதால் முன்னதாகவே விருப்ப விண்ணப்பத்தினை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி. இ. ஆ. ப. தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி