பாஜகவுக்கு எதிராக நானும் திருமாவளவனும்.. கமல் பிரச்சாரம்

54பார்த்தது
பாஜகவுக்கு எதிராக நானும் திருமாவளவனும்.. கமல் பிரச்சாரம்
மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இன்று(ஏப்ரல் 3)பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், 'ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான், நான் தம்பி திருமாவளவனோடு தோள் உரசி களம் கண்டிருக்கிறோம். இந்த முறை பாஜகவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்துவிட்டால், ஜனநாயகமே இருக்காதோ என்று அறிஞர்கள் கவலைப்படுகிறார்கள். அவர்கள் அறிஞர்கள் கவலை மட்டும் படுவார்கள். நாங்கள் வீரர்கள்... களம் கண்டே ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you