நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ள நிலையில், ஆண்டின் கடைசி நாளான நேற்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். இதற்கிடையில், உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள கங்கா காட் என்ற இடத்தில் மக்கள் ஆண்டின் இறுதி நாள் இரவை கொண்டாடி, புத்தாண்டை கோலாகலமாக வரவேற்றனர்.