தவெக விழா: நீட் தேர்வுக்கு எதிராக விஜய் பேச்சு

51பார்த்தது
தவெக விழா: நீட் தேர்வுக்கு எதிராக விஜய் பேச்சு
10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தவெக சார்பில் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பேசிய விஜய் நீட் தேர்வுக்கு எதிராக பேசியுள்ளார். “நீட் தேர்வு மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக இருக்கிறது. ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கனவை இந்த தேர்வு சிதைக்கிறது. நீட் தேர்வில் நடந்த குளறுபடிகள் காரணமாக இந்த தேர்வின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர். கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். மாநில அரசுக்கு முழு அதிகாரம் கொடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு நீட் விலக்கு தான்” என அவர் பேசினார்.

தொடர்புடைய செய்தி