ஐபிஎல் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 135 ரன்கள் எடுத்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இன்றைய 2-வது தகுதிச் சுற்று ( அரையிறுதி) போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதி வருகிறது.
ஷார்ஜாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்து. இதையடுத்து, 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியுள்ளது.