ஸ்ட்ராங் ரூமில் செயல் இழந்த சிசிடிவி

80பார்த்தது
ஸ்ட்ராங் ரூமில் செயல் இழந்த சிசிடிவி
திருப்பூரில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல்லடம் சாலை எல்ஆர்ஜி அரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு (மே 14) பவானி சட்டப்பேரவை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் 25 நிமிடங்கள் சிசிடிவி செயல்படவில்லை. தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்னர், “மழையின் காரணமாக மின்தடை ஏற்பட்டது. 20 நிமிடங்களுக்குள்ளாக சரி செய்யப்பட்டது” என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி