கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்.. ஒருவர் கைது!

65பார்த்தது
கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்.. ஒருவர் கைது!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில், அங்கித் கோயல் (33) என்பவரை கைது செய்தது டெல்லி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மெட்ரோ ரயில்களுக்குள்ளும், ரயில் நிலையங்களிலும் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக ஆம் ஆத்மி புகார் அளித்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்த நபர் சைன்போர்டுகளில் இவ்வாறு எழுதியது தெரியவந்தது. மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அத புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி