பீடிக்காக பிச்சைக்காரர் கொலை.. பரபரப்பு

72பார்த்தது
பீடிக்காக பிச்சைக்காரர் கொலை.. பரபரப்பு
மதுரை மாவட்டம் ஆத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் சர்க்கரை (65). இவர் நாராயணபுரம் மந்தையம்மன் கோவில் அருகே யாசகம் பெற்று, அந்த கோவில் பகுதியிலே படுத்து உறங்கி வந்துள்ளார். இவருடன் இணைந்து நாராயணபுரம் பகுதியை சேர்ந்த முருகன் (43) என்பவர் உறங்கியுள்ளார். இந்நிலையில் சர்க்கரை, பீடி பிடிக்கும்போது பார்த்த முருகன், தனக்கும் பீடி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் முருகனை ஆபாசமாக திட்டியுள்ளார் சர்க்கரை. இதனால் ஆத்திரமடைந்த அவர் இரவு தூங்கிக்கொண்டிருக்கும்போது சர்க்கரை தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதனையடுத்து முருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி